Friday, April 23, 2010

சாப்பிட்டவுடன் உடனடியாக

சாப்பிட்டவுடன் உடனடியாக செய்யக்கூடாத ஏழு செயல்கள்.(செஞ்சா கண்டிப்பா ஏழரை)புகைக்கக்கூடாதுசிகெரெட் புகைக்கக் கூடாது. உணவுக்குப் பின் புகைக்கும் ஒரு சிகெரெட், பத்து சிகெரெட்டு புகைத்ததற்கு சமம் என்பது ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆராய்ச்சின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. (பாஸஞ்சர்ல வர்ற கேன்சர் சூப்பர் ஃபாஸ்ட்ல வரும்)பழங்களை சாப்பிடக்கூடாதுஉணவுக்குப் பின் உடனே பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படும். எனவே உணவுக்குப் பிறகு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதே நல்லது.தேநீர் அருந்தக்கூடாதுதேநீர் அருந்துவதால்,வயிற்றில் அமிலத்தை சேர்க்கிறது.இதனால் புரதச் சத்து கடிணமாகி,ஜீரனிக்க சிரமம் ஏற்படும்.இடுப்பு பெல்ட்டை தளர்த்தக்கூடாதுஅப்படி தளர்த்துவதால் சுலபமாக குடல் சுருண்டு கொள்ளவோ, அடைத்துக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது(அடுத்த ரவுண்டுக்கு ரெடி பண்ணிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் யோசிக்கனும்)குளிக்கக்கூடாது(எப்பவுமே இல்லைங்க...சாப்ட்ட உடனேதான்)குளிப்பதால் கை ,கால்,மற்ற உடல் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகமாவதால்...வயிறைச் சுற்றி இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது.அதனால் ஜீரனமாவது தாமதமாகும்.நடக்கக்கூடாது.உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.உறங்கக்கூடாதுஉடன் உறக்கத்தால்,சரியான செரிமானமில்லாமல்,வாயுத்தொல்லையும்,குடல் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

1 comment:

  1. Glad to c you in blog world. given info are very useful. Tnx fr sharing. All the best.

    ReplyDelete